மென்பொருள்

ஆவிகள் உலகம்! ஆதாரத்துடன்!

ஆவிகள் பேய்கள் பிசாசுக்கள் உண்டு,இல்லை என இரு மாறுபட்ட கருத்துக்கள் இன்று வரை இருந்துவருகின்றது. ஆனால் என்னைப்பொறுத்தவரையில் கடவுள் நம்பிக்கை உடையவன் ஆவிகளை நம்பித்தான் ஆக வேண்டும். அதனை பலர் ஆதரத்துடன் நிரூபித்தும் இருக்கிறார்கள்.

சில ஆவிகள் பழிவாங்கும் எண்ணத்துடன் அலைவதாக கூறுகின்றனர். ஆனால் எமது ஆத்மா உடலுடன் ஒன்றியிருக்கும் போது இல்லாத சக்தி ஆத்மா உடலை விட்டுப்பிரிந்த பின்பு எவ்வாறு வருகின்றது?

நானறிந்த உண்மை யாதெனில் ஆவிகளை கண்டு பயப்படத்தேவையில்லை. ஏனெனில் ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கம் போது அந்த நபர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்ணுக்கு தென்படுவதற்குரிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதேசமயம் அந்த ஆவி ஒருவருக்குத்தென்படும் பொழுது அவர் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். அதாவது அவர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். இதனால் பலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு அதிர்ச்சியால் மரணம் கூட சம்பவிக்கின்றது. இதனை நம்மவர்கள் பேய் பிடித்துவிட்டது, பேய் அடித்து விட்டதென்றெல்லாம் கூறுகின்றனர்.


நான் அண்மையில் youtube இல் சில வீடியோக்கள் பார்த்தேன். அந்த இணைப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வீட்டில் ஒரு அலுமாரியின் இரவில் பூட்டப்பட்ட கதவு ஒவ்வொருநாள்க்காலையிலும் திறக்கப்பட்டிருந்தது. அவ்வீட்டு நபர் வீடியொ கமெரா ஒன்றை பொருத்தி தொடர்ந்து ஓரிரு நாட்களுக்கு பதிவுசெய்கிறார். அது என்ன வென்று நீங்களும் கொஞ்சம் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=Ot4AcNH6tYY


வேறு சில.....
Clip 1
http://www.youtube.com/watch?v=G13xWSeh5qA

Clip 2
http://www.youtube.com/watch?v=u6trH81xpko

Clip 3
http://www.youtube.com/watch?v=MlpYfP8PQDA


உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

அதற்காக தமிழ்க்காற்று வலைப்பதிவிற்கு பேய்பிடித்துவிட்டது என்றெல்லாம் கருத்துப்போடாதீர்கள்!

0 comments: