மென்பொருள்

ஆவிகள் உலகம்! ஆதாரத்துடன்!

ஆவிகள் பேய்கள் பிசாசுக்கள் உண்டு,இல்லை என இரு மாறுபட்ட கருத்துக்கள் இன்று வரை இருந்துவருகின்றது. ஆனால் என்னைப்பொறுத்தவரையில் கடவுள் நம்பிக்கை உடையவன் ஆவிகளை நம்பித்தான் ஆக வேண்டும். அதனை பலர் ஆதரத்துடன் நிரூபித்தும் இருக்கிறார்கள்.

சில ஆவிகள் பழிவாங்கும் எண்ணத்துடன் அலைவதாக கூறுகின்றனர். ஆனால் எமது ஆத்மா உடலுடன் ஒன்றியிருக்கும் போது இல்லாத சக்தி ஆத்மா உடலை விட்டுப்பிரிந்த பின்பு எவ்வாறு வருகின்றது?

நானறிந்த உண்மை யாதெனில் ஆவிகளை கண்டு பயப்படத்தேவையில்லை. ஏனெனில் ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கம் போது அந்த நபர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்ணுக்கு தென்படுவதற்குரிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதேசமயம் அந்த ஆவி ஒருவருக்குத்தென்படும் பொழுது அவர் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். அதாவது அவர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். இதனால் பலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு அதிர்ச்சியால் மரணம் கூட சம்பவிக்கின்றது. இதனை நம்மவர்கள் பேய் பிடித்துவிட்டது, பேய் அடித்து விட்டதென்றெல்லாம் கூறுகின்றனர்.


நான் அண்மையில் youtube இல் சில வீடியோக்கள் பார்த்தேன். அந்த இணைப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வீட்டில் ஒரு அலுமாரியின் இரவில் பூட்டப்பட்ட கதவு ஒவ்வொருநாள்க்காலையிலும் திறக்கப்பட்டிருந்தது. அவ்வீட்டு நபர் வீடியொ கமெரா ஒன்றை பொருத்தி தொடர்ந்து ஓரிரு நாட்களுக்கு பதிவுசெய்கிறார். அது என்ன வென்று நீங்களும் கொஞ்சம் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=Ot4AcNH6tYY


வேறு சில.....
Clip 1
http://www.youtube.com/watch?v=G13xWSeh5qA

Clip 2
http://www.youtube.com/watch?v=u6trH81xpko

Clip 3
http://www.youtube.com/watch?v=MlpYfP8PQDA


உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

அதற்காக தமிழ்க்காற்று வலைப்பதிவிற்கு பேய்பிடித்துவிட்டது என்றெல்லாம் கருத்துப்போடாதீர்கள்!

WinRAR(rar conveter)

தற்பொழுது இணையத்தளத்திலிருந்து download செய்யும் files பெரும்பாலும் RAR (file format)இல் இருக்கின்றது. இந்த files இனை WinRAR என்ற softwear இன் ஊடாக original files ஆக மாற்றிக்கொள்ளமுடியும்.

Click hear to download & install WinRAR 3.70


Rar file இல் right click செய்து தோன்றும் menu இல் extract files இனை click செய்யவும்.

















ஒரு சில files களை click செய்யும்பொழுது password கொடுக்கவேண்டும்.






















நீங்கள் rar file download செய்யும் இணையத்தளத்தில் rar file link இன் கீழ் password இணைக்கப்பட்டிருக்கும்.
Ex-
இதில் "thegreatforum.org" என்பது password.

விண்டோஸ் பேசும்!

விண்டோஸ் XP,VISTA இல் நீங்கள் Type செய்யும் எழுத்து,சொல் அல்லது சொற்றொடர்களின் உச்சரிப்புக்களை கேட்கலாம்.

Start--Contorl panel--speech ஐ click செய்யும் போது இவ்வாறு தோன்றும்!


"You have selected Microsoft sam as the computer's default voice" என்ற இடத்தில் type செய்து preview இனை click செய்யவும்!

அகராதிகள் சில!

http://www.freedict.com/onldict/dut.html குறிப்பிட்ட சில மொழிகளின் அகராதிகளின் இணையமுகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது। நீங்கள் ஆங்கிலத்தில் நினைக்கும் ஒரு சொல்லினை search என்ற இடத்தில் type செய்து click செய்யவும்.

English-malay click here
http://www.dicts.info/di1.php?k1=1&k2=224

English-tamil click here http://dictionary.sarma.co.in/Default.aspx

English-shinhala-tamil http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp

இந்த இணையதளத்தில் வசனமாகவும் தேடலாம். http://www.freetranslation.com/

பழமொழிகள் கொஞ்சம் பார்ப்போம்!

  1. அகத்தினழகு முகத்தில் தெரியும்.
  2. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  3. அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
  4. அடியாத மாடு படியாது.
  5. அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
  6. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
  7. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
  8. அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
  9. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
  10. அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
  11. அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
  12. அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
  13. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
  14. ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
  15. ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
  16. ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  17. ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  18. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
  19. ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  20. ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
  21. ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
  22. ஆனைக்கும் அடிசறுக்கும்.
  23. இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
  24. இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
  25. உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
  26. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
  27. எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
  28. எறும்பூரக் கல்லும் தேயும்.
  29. ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
  30. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
  31. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  32. கடுகு சிறிதானாலும் காரம் பெரிது. கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
  33. கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
  34. கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
  35. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
  36. கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
  37. கழுதை அறியுமா கற்பூர வாசனை?
  38. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
  39. காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
  40. காகம் திட்டி மாடு சாகாது.
  41. காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
  42. காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
  43. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
  44. கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
  45. குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
  46. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
  47. குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
  48. குரைக்கிற நாய் கடிக்காது.
  49. கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
  50. கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
  51. கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
  52. கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
  53. சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
  54. சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
  55. சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
  56. சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
  57. சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
  58. தடியெடுத்தவன் தண்டக்காரன்.
  59. தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
  60. தன் வினை தன்னைச் சுடும்.
  61. தனிமரம் தோப்பாகாது.
  62. தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
  63. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
  64. தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
  65. தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
  66. தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
  67. நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
  68. நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
  69. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை. நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
  70. நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
  71. நிறைகுடம் தளம்பாது. பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
  72. படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
  73. பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
  74. பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
  75. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
  76. பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
  77. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
  78. பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார். பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
  79. புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
  80. புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
  81. பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
  82. பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
  83. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  84. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  85. மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம். மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
  86. முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
  87. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
  88. முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
  89. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
  90. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
  91. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
  92. விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
  93. விரலுக்குத் தக்கதே வீக்கம். விளையும் பயிரை முளையிலே தெரியும். வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
  94. வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
  95. வெளுத்ததெல்லாம் பாலல்ல. வேலிக்கு ஓணான் சாட்சி.
  96. வைக்கோற் போர் நாய் போல.

கப்ஸ் லொக்(Capslock) கீயை அழுத்தும்போது ஒலி ஏற்படுத்தும் செயற்பாடு

கப்ஸ் லொக்(Capslock) கீயை அழுத்தும்போது ஒலி ஏற்படுத்தும் செயற்பாடு எம்மில் பலர் கீபோர்டில்(Key board) ரைப்செய்யும்போது தவறுதலாக கப்ஸ் லொக்(Capslock) கீயை அழுத்திவிடுவார்கள். ஆதன்பின்னர் ரைப்செய்யும் எழுத்துக்கள் பெரிய(Capital) எழுத்துக்களாக திரையில் தெரியும். இந்த சிக்கலுக்கு விண்டோஸில் ஒரு தீர்வு உள்ளது. அதாவது கப்ஸ் லொக்(Capslock)கீயை அழுத்தும்போது ஒரு ஒலி கேட்கும். எவ்வாறு செயற்படுத்துவது? கன்ட்ரோல் பனலுக்கு செல்லவும்.(Start>setting>control panal) Accessibility option என்ற ஐக்கனை (Double Click) செய்யவும். அப்பொழுது தோன்றும் விண்டோஸின் கீழ்பகுதியில்; Use Toggle Keys என்பதன் இடதுபுறமுள்ள செக்பொக்சில் டிக்(Click) செய்து பின்னர் Apply யை click செய்து பின்னர் ok யை click செய்யவும். தற்பொழுது கப்ஸ் லொக்(Capslock) கீயை அழுத்தும்போது கப்ஸ் லொக்(Capslock) on ஆகும்வேளையில் பீப்(Beep) என்ற ஒலியும் off ஆகும்வேளையில் மற்றொரு வித ஒலியும் கேட்கும். இந்த ஒலி num lock,scroll lock ஆகிய கீகளை (on/off)செய்யும்போதும் கேட்கும்.